இந்தியாவிலேயே கட்டப்பட்ட முதலாவது விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பலை பெற்று கொண்ட இந்திய கடற்படை !!

  • Tamil Defense
  • October 31, 2021
  • Comments Off on இந்தியாவிலேயே கட்டப்பட்ட முதலாவது விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பலை பெற்று கொண்ட இந்திய கடற்படை !!

இந்திய கடற்படை நேற்று ப்ராஜெக்ட்-5 பி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் விசாகப்பட்டினம் ரக வழிகாட்டப்பட்ட ஏவுகணை நாசகாரி கப்பல்களில் முதல் கப்பலை பெற்று கொண்டது.

ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் என பெயரிடப்பட்டுள்ள இந்த முதல் கப்பலானது பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பல்கள் ஏற்கனவே இந்திய கடற்படையில் சேவையில் இருக்கும் கொல்கத்தா ரக நாசகாரி கப்பல்களின் மேம்பட்ட வடிவமாகும்.

இந்த விசாகப்பட்டினம் ரகத்தில் விசாகப்பட்டினம், இம்பால், மர்மகோவா மற்றும் போர்பந்தர் என நான்கு நாசகாரி போர்கப்பல்கள் உள்ளன,

மேற்குறிப்பிட்ட கப்பல்கள் படையில் இணையும் பட்சத்தில் நாசகாரி கப்பலகளின் எண்ணிக்கை 15 ஆக உயரும் இது இந்திய கடற்படைக்கு பன்மடங்கு வலுசேர்க்கும் என்பதில் ஐயமில்லை.