
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டரின் அதிக உயர பகுதி சோதனைகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்த வகை ஹெலிகாப்டர்களில் தயாரிக்கப்பட்ட நான்கு ரகங்களும் அனைத்து வகையான சோதனைகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை தொடர்ந்து தரைப்படை மற்றும் விமானப்படைகளில் உள்ள சீட்டா மற்றும் சேட்டக் ஹெலிகாப்டர்களுக்கு மாற்றாக இந்த வகை ஹெலிகாப்டர்கள் இணைக்கப்படும் என கூறப்படுகிறது.
1960களில் வடிவமைக்கப்பட்ட சீட்டா மற்றும் சேத்தக் ஆகியவை அரத பழையனவாகும் கடந்த 10 வருடங்களில் 15 விபத்துகள் நடைபெற்று உள்ளன.
இந்த விபத்துகளில் பல அதிகாரிகள் இறந்துள்ளனர், கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் ராவத் கூட 2015ஆம் ஆண்டு சீட்டா விபத்து ஒன்றில் உயிர் தப்பியவர் ஆவார்.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பானிடாப் பகுதியில் நடைபெற்ற சீட்டா ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு தரைப்படை அதிகாரிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆகவே வரும் காலங்களில் தரைப்படைக்கு 61 விமானப்படைக்கு 126 என மொத்தமாக 187 ஹெலிகாப்டர்களுக்கான ஆர்டர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் தூம்கூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவன தொழிற்சாலையில் தயாரிப்பு பணிகள் நடைபெறும் எனவும் வருடத்திற்கு 100 ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.