
சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுதிரி பேசினார்.
அப்போது இந்திய விமானப்படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்திற்கான தேவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஆம்காவால் சந்திக்கப்படும் என்றார்.
2030க்கு பிறகு இந்த விமானம் படையில் இணையும் எனவும் விரைவில் மிக்21, ஜாகுவார் மற்றும் மிக் 29 விமானங்கள் படையில் இருந்து விலக்கப்படும் எனவும்,
2030ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய விமானப்படையில் 35 போர் விமான படையணிகள் இருக்கும் என்றார். இது அங்கீகரிக்கப்பட்டதை விடவும் 7 படையணிகள் குறைவாகும்.