
இந்தியாவின் ரகசிய ஸ்டெல்த் ஆளில்லா போர் விமானத்தின் ரகசியம் வெளியானது.
சமீபத்தில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடைபெற்ற இதன் சோதனை பற்றிய காணொளி வெளியானது.
ஸ்விஃப்ட் என அழைக்கப்படும் இது எதிர்காலத்தில் தயாரிக்கப்பட உள்ள கடக் ஆளில்லா விமானத்திற்கு முன்னொடியாக இருக்கும்.
இதில் ரஷ்ய என்ஜின் பயன்படுத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது மேலும் இது 13அடி நீளம் மற்றும் 16 அடி அகலம் கொண்டது.
இதுபற்றி மத்திய அரசோ அல்லது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமோ இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.