
அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு கடந்த 9ஆம் தேதி இந்திய துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு சென்று அம்மாநில சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதற்கு சீனா தனது வெளியுறவு செயலர் ஜாவோ லிஜியன் மூலமாக அருணாச்சல பிரதேசத்தை இந்தியா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும்,
அதனை சீனா அங்கீகரிக்காத நிலையில் இந்திய துணை ஜனாதிபதியின் பயணத்தை கண்டிப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்திய துணை ஜனாதிபதி மற்றும் இந்திய மாநிலங்களுக்கு பயணிப்பது போல அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றதாகவும்,
சீனாவின் எதிர்ப்பு ஒன்றால் மட்டுமே அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக இருப்பதில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது.