இந்தியாவின் ருத்ரா Vs சீனாவின் Z-10, ருத்ரா வெற்றி !!

  • Tamil Defense
  • October 10, 2021
  • Comments Off on இந்தியாவின் ருத்ரா Vs சீனாவின் Z-10, ருத்ரா வெற்றி !!

இந்திய விமானப்படையின் 116ஆவது ஹெலிகாப்டர் படையணி ரூத்ரா தாக்குதல் ஹெலிகாப்டர்களை இயக்கி வருகிறது, இந்த படையணிக்கு சமீபத்தில் ஏர் சீஃப் மார்ஷல் பதவ்ரியா யூனிட் சைட்டேஷன் விருது வழங்கி கவுரவித்தார்.

இதற்கு காரணம் அந்த படையணி இயக்கி வரும் ரூத்ரா ஹெலிகாப்டர்கள் அதிக உயர பகுதியான லடாக்கில் சிறப்பாக செயல்பட்டதால் இந்தியாவின் படைபலம் கணிசமாக அதிகரித்துள்ளதே ஆகும்.

எல்லைக்கு அப்பால் சீன தரைப்படை தனது Z-10 தாக்குதல் ஹெலிகாப்டர்களை நிலைநிறுத்தி உள்ளது, ஆனால் அதனுடைய டர்போ ஷாப்ஃட் என்ஜினால் தனது முழு ஆயுதங்களை சுமந்து கொண்டு பறக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

மேலும் குறைந்த எடையிலான ஆயுதங்களுடனும் பறக்க முயற்சி செய்த போதும் அது தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது ஆகவே அதிக உயர பகுதிகளில் செயல்பட முடியாது என்பது தெளிவாகிறது.

சீனாவின் மிக நெருங்கிய சகாவான பாகிஸ்தான் கூட இந்த ஹெலிகாப்டர்களை வாங்க மறுத்து நிராகரித்து துருக்கியின் டி129 ஹெலிகாப்டர்களை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

சீனா ஐரோப்பிய நாடு ஒன்றுடன் இணைந்து அதிக உயர பகுதிகளில் செயல்படக்கூடிய திறன் வாய்ந்த என்ஜின் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.