46 நாடுகளை இணைத்து உலக வரலாற்றில் மிகப்பெரிய கடற்படை போர்பயிற்சி நடத்த இந்தியா திட்டம் !!
இந்திய கடற்படை சுமார் 46 நாடுகளின் கடற்படைகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய மெகா கடற்படை போர் பயிற்சியை நடத்த விரும்பி திட்டமிட்டு வருகிறது.
இதன் தகவல்களை பார்க்கையில் அமெரிக்கா நடத்தும் ரிம்பாக் கடற்படை போர் பியிற்சியை விட மிக பெரியதாக இருக்கும் என தெரிகிறது காரணம் அங்கு 22 நாடுகள் மட்டுமே பங்கு பெற்றன.
மேலும் வழக்கமாக மிலன் கடற்படை போர் பயிற்சிகள் அந்தமானில் நடைபெறும் இந்த முறை இத்தகைய மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதால் அதிக கப்பல்களை நிறுத்தும் வசதி கொண்ட விசாகப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
“மிலன்-2022” என பெயரிடப்பட்டுள்ள இந்த பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டி சுமார் 46 நாடுகளுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல நாடுகள் தங்களது வருகையை உறுதி செய்துள்ளன.
இந்த பட்டியலில் அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா உள்ளிட்ட க்வாட் நாடுகள், தென்சீன கடல் நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், ப்ரூனே மற்றும் ஃபிலிப்பைன்ஸ் ஆகியவையும்
மேலும் இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் சவுதி அரேபியா குவைத் வங்கதேசம் ஃபிரான்ஸ் இங்கிலாந்து சிங்கப்பூர் நியூசிலாந்து மியான்மர் ஆகிய கடற்படைகளும் இடம்பெற்றுள்ளன.
கல்வான் மோதலுக்கு பிறகு இந்தியா நடத்தும் இந்த போர் பயிற்சியானது மிக பிரமாண்டமான அளவில் நடைபெற உள்ளது என்பதும், மிலன் கடற்படை போர் பயிற்சியானது 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.