
இந்திய கடற்படையின் முக்கிய கமாண்டர்கள் அனைவரும் பங்கு பெறக்கூடிய ஐந்து நாள் மாநாடு இன்று துவங்க உள்ளது.
இந்த மாநாட்டில் கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் ராவத், தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே மற்றும் விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுதிரி ஆகியோர் பங்கேற்று,
இந்திய கடற்படையின் கமாண்டர்களுடன் முப்படைகள் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் இதர பல முக்கிய விஷயங்களை குறித்து விவாதிக்க உள்ளனர்.
மேலும் இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இந்திய கடற்படையின் பல்வேறு நடவடிக்கைகளை விரிவாக ஆராய்ந்து திட்டங்களை வகுக்க உள்ளனர்.
அதிகரித்து வரும் சீனாவின் அடாவடித்தனத்திற்கு இடையே நடைபெறும் இந்த மாநாடு இதன் காரணமாகவே பன்மடங்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.