
இந்திய கடற்படையில் பணியாற்றி வரும் கமாண்டர் அந்தஸ்து கொண்ட அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் இந்திய கடற்படையின் கிலோ ரக நீர்மூழ்கிகளின் மேம்படுத்தல் குறித்த ரகசிய ஆவணங்களை விற்றதற்காக கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களை கைது செய்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது மேலும் இந்திய கடற்படை இரண்டு மூத்த அதிகாரிகளை நியமித்து துறை ரீதியான விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.