
ஒரு கருத்தரங்கில் பேசிய இந்திய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் அவர்கள் இந்தோ பசிஃபிக் பகுதியில் அதிகாரத்திற்காக நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வருவதாக பேசியுள்ளார்.
நாளுக்கு நாள் ராணுவ மற்றும் அரசியல் சூழல்கள் மிகப்பெரிய மாற்றம் கண்டு வரும் நிலையில் ஸ்திரத்தன்மையில் இந்திய கடற்படை முக்கிய பங்கு வகித்து வருவதாகவும் கூறினார்.
இதற்காக சில முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
முதலாவதாக பொதுவாக பிராந்தியம் முழுவதற்குமாக இருக்கும் பிரச்சினைகளை கூட்டாக எதிர்கொள்வது,
இரண்டாவதாக இந்தோ பசிஃபிக் பிராந்தியம் தாண்டிய கண்ணோட்டம், முன்றாவதாக தேவைப்படும் போது பிற நாடுகளுடன் இணைந்து செயலாற்றுவது,
கடைசியாக அருகாமையில் கணிசமான பலம் கொண்ட ராணுவங்கள் இல்லாத சிறு தீவு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமாக பாதுகாப்பு வழுங்கும் இடத்தை நிரப்புவது ஆகும்.