
இங்கிலாந்து கடற்படைக்கு சொந்தமான குயின் எலிசபெத் விமானந்தாங்கி போர்கப்பலை இந்திய கடற்படையின் அட்மிரல்கள் பார்வையிட உள்ளனர்.
கூட்டு பயிற்சிக்காக இந்தியா வந்துள்ள இந்த பிரமாண்ட போர்க்கப்பலுக்கு இந்திய அதிகாரிகள் மும்பை கடற்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பயணிக்க உள்ளனர்.
இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் தனது வலிமையை சீனாவுக்கு உணர்த்தும் வகையில் இங்கிலாந்து இந்த கப்பல் மற்றும் அதன் படையணியை நிலைநிறுத்தி உள்ளது.
இந்தியா இந்த ரக விமானந்தாங்கி கப்பல்களின் டிசைனை தனது இரண்டாவது உள்நாட்டு விமானந்தாங்கி கப்பலுக்கு பயன்படுத்தி கொள்ள விரும்பியது குறிப்பிடத்தக்கது.