இந்திய கடற்படை தலைமை தளபதி மற்றும் மூத்த அமெரிக்க கடற்படை அதிகாரி இடையே முக்கிய பேச்சுவார்த்தை !!
1 min read

இந்திய கடற்படை தலைமை தளபதி மற்றும் மூத்த அமெரிக்க கடற்படை அதிகாரி இடையே முக்கிய பேச்சுவார்த்தை !!

இந்திய கடற்படையின் தலைமை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் மற்றும் மூத்த அமெரிக்க கடற்படை தளபதிகளில் ஒருவரான அட்மிரல் மைக்கேல் கில்டே ஆகியோர் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய அளவிலான பாதுகாப்பு ஆகியவற்றை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது சீனாவின் அடாவடி அதிகரித்துள்ள நேரத்தில் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.

ஐந்து நாள் சுற்றுபயணமாக இந்தியா வந்துள்ள அட்மிரல் மைக்கேல் கில்டே அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைகள் பிரிவின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.