
இந்திய ஊடகங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மோதலின் போது சீன வீரர்கள் வீழத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டன.
இதனையடுத்து சீனா இந்திய ஊடகங்கள் ஆதாரமற்ற செய்திகளையும் வதந்திகளையும் பொய்களையும் பரப்புவதாக குற்றம்சாட்டிய சீனா அத்தகைய நிகழ்வு நடக்கவில்லை என மறுப்பு தெரிவித்தது.
இதன் பிறகு தான் திருடனுக்கு தேள்கொட்டிய நிலையில் இருந்த சீனா கல்வானில் நடைபெற்ற நிகழ்வுகளின் ஒருதலைபட்சமான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.