
இந்தியா சீன எல்லையோரம் தனது ட்ரோன் அல்லது ஆளில்லா விமான திறனை மேம்படுத்தி வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் இந்திய தரைப்படை தனது ட்ரோன்களை செயற்கைகோள்களுடன் இணைத்து மேம்படுத்தி வருகிறது மேலும் இத்தகைய புதிய ட்ரோன்களை பெறவும் விரும்புகிறது.
மேலும் சீன எல்லையை நிர்வகிக்கும் தரைப்படையின் கிழக்கு கட்டளையகத்தில் புதியதாக ப்ரிகேட் அளவிலான ஒரு ஏவியேஷன் படைப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது.
மேலும் தரைப்படையின் ஆர்ட்டில்லரி அதாவது பிரங்கி படையின் கீழ் இருந்த ட்ரோன்கள் படிப்படியாக ஏவியேஷன் படைப்பிரிவின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.
மேலும் இவற்றை இயக்கி வந்த பிரங்கி படையை சேர்ந்த ட்ரோன் விமானிகளும் தற்போது தரைப்படை ஏவியேஷன் கோருக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
அதாவது தரைப்படையிடம் உள்ள அனைத்து பறக்கும் திறன் கொண்ட தளவாடங்களும் தற்போது தரைப்படை ஏவியேஷன் கோருக்கு மாற்றப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.