இங்கிலாந்தில் நடைபெற்ற உலகின் கடினமான கேம்ப்ரீயன் போட்டியில் இந்திய ராணுவம் வெற்றி !!

  • Tamil Defense
  • October 16, 2021
  • Comments Off on இங்கிலாந்தில் நடைபெற்ற உலகின் கடினமான கேம்ப்ரீயன் போட்டியில் இந்திய ராணுவம் வெற்றி !!

இங்கிலாந்து நாட்டில் அந்நாட்டு ராணுவம் உலகின் மிக கடினமான ரோந்து போட்டியை நடத்துவதும் இதில் பல்வேறு நாடுகளின் ராணுவங்கள் கலந்து கொள்வதும் வழக்கம்.

கேம்ப்ரீயன் மலைப்பகுதி மற்றும் வேல்ஸ் பகுதியில் உள்ள சதுப்பு நிலப்பரப்பில் நடைபெறும் இந்த போட்டியில் 48 மணி நேரத்தில் 65 கிலோமீட்டரை கடக்க வேண்டும்.

அந்த வகையில் பல நாட்டு ராணுவங்கள் பங்கு பெறும் இந்த போட்டியில் முதலாவதாக வரும் அணிக்கு தங்க பதக்கம் வழங்கப்படும்.

இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற 4ஆவது கோர்க்கா ரெஜிமென்ட்டின் 5ஆவது பட்டாலியன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுது குறிப்பிடத்தக்கது.