
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவம் தவாங் செக்டாரில் சீன எல்லைக்கு மிக அருகே போர் பயிற்சி ஒன்றை நடத்தியது.
அப்போது கடும் பனிமூட்டத்திற்கு இடையே மறைந்திருக்கும் எதிரி டாங்கியை இந்திய வீரர்கள் தொலைவில் இருந்து கண்காணித்து இலக்கை அடையாளம் கண்டு,
பின்னர் பங்கர்களில் இருந்து வழிகாட்டப்பட்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை இலக்கை நோக்கி ஏவி வெற்றிகரமாக தாக்குதல் நடத்தினர்.