தரைப்படையை நவீனப்படுத்தும் வகையில் ஐ.பி.ஜி திட்டம் ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • October 24, 2021
  • Comments Off on தரைப்படையை நவீனப்படுத்தும் வகையில் ஐ.பி.ஜி திட்டம் ஒரு பார்வை !!

இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் திட்டங்களின் வரிசையில் ஐ.பி.ஜி அதாவது ஒருங்கிணைந்த தாக்குதல் படையணிகள் (Integrated Battle Groups) மிக முக்கியமானது.

தற்போது காலாட்படை கவசவாகன படை, பிரங்கி படை, டாங்கி படை ஆகியவை போர் களத்தில் தன்னந்தனியாக இயங்கி வருகின்றன.

இனி எதிர்காலத்தில் இவைகள் ஒரே அணியாக செயல்படும் அதாவது ஒரு கோர் படைப்பிரிவில் 5-7 ஐ.பி.ஜிக்கள் இருக்கும்.

ஒவ்வொரு ஐ.பி.ஜி அணியிலும் 4-6 காலாட்படை பட்டாலியன்கள், 1 கவச வாகன பட்டாலியன், 1 டாங்கி ரெஜிமென்ட், பிரங்கி படையணி, மருத்துவ அணி, சப்ளை மற்றும் தகவல் தொடர்பு அணிகள் உள்ளடங்கி இருக்கும்.

இந்த ஐ.பி.ஜி படையணிகள் அணைத்தும் மேஜர் ஜெனரல் அந்தஸ்து கொண்ட அதிகாரிகளால் வழிநடத்தப்படும் அவர்களுக்கு உதவியாக ப்ரிகேடியர் அந்தஸ்து கொண்ட அதிகாரிகள் பணியாற்றுவர்.

தற்போதைய டிவிஷன் மற்றும் ப்ரிகேட் படையணி முறை இனி இருக்காது இதன் காரணமாக மேஜர் ஜெனரல் அதிகாரிகளுக்கான இடங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே தரைப்படையின் 17ஆவது மற்றும் 9ஆவது கோர் படையணிகளுக்கான ஐ.பி.ஜி அமைப்பு தயார் செய்யப்பட்டு ஒப்புதலுக்கு காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.