6 பயங்கரவாதிகளை ரஜோரி காடுகளில் கொன்று குவித்த ராணுவம் !!

  • Tamil Defense
  • October 20, 2021
  • Comments Off on 6 பயங்கரவாதிகளை ரஜோரி காடுகளில் கொன்று குவித்த ராணுவம் !!

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் செக்டாரில் உள்ள ரஜோரி காடுகளில் கடந்த சில நாட்களாக தீவிரமான தேடுதல் வேட்டை மற்றும் என்கவுன்டர் நடைபெற்று வருகிறது.

இந்த ஆபரேஷனை நடத்தி வரும் 16ஆவது கோர் படைப்பிரிவின் வீரர்கள் ரஜோரி காடுகளில் ஆறு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளை கொன்று குவித்துள்ளனர்.

இதே ஆபரேஷனில் தான் இதுவரை நாம் 9 ராணுவ வீரர்களை இழந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது, பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கிடைத்த தகவல்களின்படி 10 பயங்கரவாதிகள் வரை அங்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த ஆபரேஷனில் 9 வீரர்களை இழக்க காரணம் ராணுவத்தினரை போன்றே இருவர் கொண்ட குழுக்களாக இயங்கியது ராணுவ வீரர்கள் மீது சுலபமாக தாக்குதல் நடத்த உதவியது என மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

மேலும் ஆவேசத்துடனும் உற்சாகத்துடனும் ஆபரேஷனில் இருக்கும் வீரர்களுக்கு பொறுமையாக இருக்கும் படியும்

பயங்கரவாதிகளை நெருக்கி நெருக்கி களைப்படைய வைத்து பின்னர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.