
சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரக்கூடிய என்கவுன்டரில் ஒர் இந்திய ராணுவ வீரரை கொன்றதாக பயங்கரவாதிகள் தகவல் வெளியிட்டனர்.
மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னனி எனும் அந்த அமைப்பு ஆதாரமாக அடையாள அட்டை மற்றும் சில பொருட்களை கொல்லப்பட்ட வீரரின் உடலில் இருந்து எடுத்ததாக கூறி தகவல் வெளியிட்டது.
இதனை சில முன்னனி ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன ஆனால் இதனை ராணுவம் மிகவும் பொய்யான தகவல் என கூறி அறிக்க வெளியிட்டுள்ளது.
இதுபற்றி ஒய்வு பெற்ற மேஜர் மானிக் ஜாலி கூறும்போது ராணுவ ஆபரேஷனில் வீரர்கள் தங்களது அடையாள அட்டையை கொண்டு செல்ல மாட்டார்கள்,
விசில்களை கொண்டு செல்ல மாட்டார்கள், கத்திரிகோல் உள்ளிட்ட சில சாதனங்கள் புத்தம் புதியவையாக உள்ளன, செல்போன் சார்ஜர்கள் காடுகளில் தேவையற்றவை,
மேலும் எந்த ஒரு ராணுவ பொருளும் அவர்கள் வெளியிட்ட புகைப்படங்களில் இல்லை ஆகவே இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட ஒன்று என அவர் கூறினார்.