
காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் சற்றே அதிகரித்துள்ள நிலையில் இந்திய தரைப்படையின் தலலமை தளபதி ஜெனரல் நரவாணே அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
இரண்டு நாட்கள் பயணமாக காஷ்மீர் சென்ற தரைப்படை தளபதியிடம் வைட் நைட் கோர் படையின் தளபதி அங்குள்ள நிலவரம் பற்றி விளக்கினார்.
இந்த நேரத்தில் தரைப்படையின் 16ஆவது கோர் படைப்பிரிவு பூஞ்ச் காட்டு பகுதியில் பயங்கரவாதிகளை ஒடுக்க ஆபரேஷன் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.