மத்திய பாதுகாப்பு அமைச்சரான ராஜ்நாத் சிங் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி சுமார் 334% அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசும் போது இந்தியா தற்போது சுமார் 75 நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி செய்து வருவதாகவும் இது இந்திய பொருட்களின் தரத்திற்கு மிகச்சிறந்த சான்று எனவும்,
பாதுகாப்பு தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு பங்களிக்கும் தூணாக அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
சைபர்வெளி, விண்வெளி, எதிர்கால தொழில்நுட்பங்கள், ஏரோஸ்பேஸ் போன்ற துறைகள் இதில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.