இருமுனை போருக்கு இந்திய விமானப்படை தயார் !!

  • Tamil Defense
  • October 7, 2021
  • Comments Off on இருமுனை போருக்கு இந்திய விமானப்படை தயார் !!

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் சவுதிரி பல முக்கிய விஷயங்களை கூறினார்.

அப்போது அவர் இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இருமுனை போருக்கு தயாராக உள்ளது என கூறினார்.

மேலும் இதற்காக இந்திய விமானப்படை தனது திறன்களை அதிகரிப்பதிலும் வலுப்படுத்துவதிலும் அதிக கவனத்தை செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

அடுத்த 3 முதல் நான்கு வருடங்களில் படையில் இருந்து விலக்கப்படும் விமானங்களுக்கு மாற்றாக புதிய விமானங்கள் இணைக்கப்படும் எனினும் அடுத்த 15 ஆண்டுகள் வரை 35 படையணிகள் தான் இருக்கும் என்றார்.