பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியில் கலந்து கொள்ளும் இந்தியா !!
1 min read

பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியில் கலந்து கொள்ளும் இந்தியா !!

ஷாங்காய் ஒத்துழைப்பு இயக்கம் சார்பில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியில் இந்தியா கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயிற்சிக்காக 3 பேர் கொண்ட குழுவை இந்தியா அனுப்பி வைக்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா தான் இந்த பயிற்சியில் கலந்து கொள்வதாக நீண்ட நெடிய யோசனைக்கு பிறகு அறிவித்த கடைசி நாடு என்பது குறிப்பிடத்தக்கது.