ஒரு நாள் இந்தியா மொத்த காஷ்மீரையும் கைபற்றும் மூத்த விமானப்படை அதிகாரி !!

  • Tamil Defense
  • October 28, 2021
  • Comments Off on ஒரு நாள் இந்தியா மொத்த காஷ்மீரையும் கைபற்றும் மூத்த விமானப்படை அதிகாரி !!

1948ஆம் ஆண்டு காஷ்மீர் போரில் பங்கேற்க இந்திய படையினர் காஷ்மீரில் தரை இறங்கியதின் 75ஆவது ஆண்டு கால விழா கொண்டாடப்பட்டது.

அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமித் தேவ் ஒரு பரபரப்பு கருத்தை வெளியிட்டார்.

அதாவது தற்போது உடனே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைபற்றுவதற்கான திட்டங்கள் இல்லை ஆனாலும் கடவுள் விரும்பினால் ஒரு நாள் மொத்த காஷ்மீரும் மீட்கப்படும் என்றார்.

மேலும் அவர் பேசும்போது இருதரப்பு மக்களுக்கு இடையே பலமான பிணைப்பு உள்ளது பாகிஸ்தான் தன்பக்க காஷ்மீர் மக்களை மோசமாக நடத்துகிறது என கூறினார்.