
இந்தியா தென் கொரியாவிடம் இருந்து கே9 வஜ்ரா தானியங்கி பிரங்கி அமைப்பை வாங்கியது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
தற்போது இந்தியா தென் கொரியாவுடன் இணைந்து அந்த பிரங்கிகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்கொரிய ஊடகமான யோன்ஹாப்பிடம் பேசிய இந்திய பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் இரு நாட்டு அரசுகளும் தற்போது இதைபற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
கே9 வஜ்ரா பிரங்கி உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ராணுவ தளவாடம் என்பதும் ஐரோப்பாவில் கூட சேவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.