30மணிநேரம் 30000 அடி உயரத்தில் பறக்கும் அதிநவீன ட்ரோன்களை பயன்படுத்தி வரும் இந்தியா !!

  • Tamil Defense
  • October 19, 2021
  • Comments Off on 30மணிநேரம் 30000 அடி உயரத்தில் பறக்கும் அதிநவீன ட்ரோன்களை பயன்படுத்தி வரும் இந்தியா !!

இந்திய தரைப்படையின் வான்படை பிரிவானது சுமார் 30மணிநேரம் தொடர்ந்து 30,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட அதிநவீன ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறது.

இஸ்ரேலிடம் இருந்து வாங்கப்பட்ட இந்த ஹெரோன் ஆளில்லா விமானங்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பதற்றமான எல்லையோரம் பயன்படுத்தி வரப்படுகின்றன.

இதற்காக அந்த மாநிலத்தின் எல்லையோரம் தரைப்படை தளத்தில் ஆளில்லா விமானங்கள் மற்றும் இலகுரக த்ருவ் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தி வரப்படுகின்றன.

இதுபற்றி பேசிய மேஜர் கார்த்திக் கார்க் இஸ்ரேலிய ஹெரோன் ஆளில்லா விமானங்கள் அழகானவை எனவும் இந்திய கண்காணிப்பு திறனின் முதுகெலும்பாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.