
இந்திய தரைப்படை சீனா உடனான எல்லையோரம் சீன படைகள் மற்றும் ராணுவ வாகனங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிநவீன தொழில்நுட்பமானது தரைப்படையாலேயே உள்நாட்டில் சுய நுண்ணறிவு திறன் மற்றும் பல இதர தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இத்தகைய பல கண்காணிப்பு தொழில்நுட்பங்களை இந்திய தரைப்படை உள்நாட்டிலேயே தயாரித்த பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.