
இந்தியா வங்க கடல் பகுதியில் விரைவில் நடத்த உள்ள சப்சானிக் க்ருஸ் ஏவுகணை சோதனைக்கான நோட்டாம் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஆனால் இந்த சோதனையில் சோதிக்கப்பட வேண்டிய ஏவுகணை பற்றிய எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை ஆகவே சில கருத்துக்கள் உலா வருகின்றன.
அதன்படி டர்போ ஃபேன் என்ஜின் பொருத்தப்பட்ட நிர்பய் சப்சானிக் க்ரூஸ் ஏவுகணையாக இருக்கலாம் எனவும் இந்த ஏவுகணை இதுவரை சோதிக்கப்படாத ITCM ஏவுகணை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ITCM ரக ஏவுகணையானது மாக் 0.7 வேகத்தில் கடல்பரப்பு மற்றும் தரையை ஒட்டி பறந்து எதிரி பகுதியில் ஆழமாக ஊடுருவி முக்கியமான இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது என தகவல்கள் தெரிவிக்கின்றன.