வேகமெடுக்கும் ஆம்கா போர் விமான திட்டம் மேற்கத்திய விமானங்களில் இல்லாத புதிய தொழில்நுட்பம் இடம்பெற உள்ளது !!

  • Tamil Defense
  • October 21, 2021
  • Comments Off on வேகமெடுக்கும் ஆம்கா போர் விமான திட்டம் மேற்கத்திய விமானங்களில் இல்லாத புதிய தொழில்நுட்பம் இடம்பெற உள்ளது !!

சுதந்திர இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்று ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சொந்தமாக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிப்பது ஆகும்.

அந்த வகையில் தற்போது படிப்படியாக ஆம்கா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது தற்போது அந்த திட்டம் வேகமெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி ஆம்கா விமானத்தில் மேற்கத்திய விமானங்களில் இல்லாத தொழில்நுட்பம் ஒன்று இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொழில்நுட்பம் ரஷ்யாவின் சுகோய்57 விமானத்தில் உள்ளதாகவும் இந்த தொழில்நுட்பத்தை இந்தியா தயாரிக்க ரஷ்யா உதவலாம் எனவும் கூறப்படுகிறது.

தற்போது வெளியாகி உள்ள இந்த செய்தி மிகப்பெரிய பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகையல்ல.