
இந்தியா அக்னி-5 கண்டம் விட்டு கண்டம் பாயும் பலிஸ்டிக் ஏவுகணையை ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக ஏவி சோதனை செய்தது.
இந்த ஏவுகணையானது 3 நிலை கொண்ட திட எரிபொருள் என்ஜினால் இயங்க கூடியதாகும் இதன் தாக்குதல் வரம்பு 5000 கிலோமீட்டர் ஆகும் மிகவும் துல்லியமானது என கூறப்படுகிறது.
இந்த சோதனையின் வெற்றியானது இந்தியாவின் கொள்கையான குறைந்தபட்ச உறுதியான தடுப்பு முதல் தாக்குதல் இல்லை என்பதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் உள்ளதாக அறிக்கை கூறுகிறது.
மாலை 7.50 மணிக்கு ஏவப்பட்ட இந்த ஏவுகணை வங்க கடலை தாண்டி இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள தனது இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.