உயிரியல் போர் முறைக்கு தயாராக வேண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் !!

  • Tamil Defense
  • October 30, 2021
  • Comments Off on உயிரியல் போர் முறைக்கு தயாராக வேண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் !!

பூனே சர்வதேச மையம் “பேரிடர் மற்றும் பெருந்தொற்று காலங்களில் தேசிய பாதுகாப்பு தயார்நிலை” எனும் தலைப்பில் நடத்திர கருத்தரங்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் கிருமிகளை துணிந்தே ஆயுதமாக மாற்றும் போக்கு கவலைக்குரியது எனவும் பயோ சேஃப்டி, பயோ டிஃபன்ஸ் மற்றும் பயோ செக்குயூரிட்டி ஆகிய திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்றார்.

உயிரியியல் ஆராய்ச்சி அறிவியல் ரீதியாக மிகவும் முக்கியமானதாகும் ஆனால் அதனை தவறாக பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்றார்.

பின்னர் காலநிலை மாற்றம் பற்றி பேசிய அவர் இதுவும் தேசிய பாதுகாப்பிற்கு மிகப்பெரிய சவால் எனவும் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தி விடும் என்றார்.