11ஆவது பி8ஐ விமானத்தை பெற்ற இந்திய கடற்படை அதிகரிக்கும் வலு !!

இந்திய கடற்படை இன்று தனது 11ஆவது போயிங் பொசைடான் பி8ஐ ரக தொலைதூர கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி வேட்டை விமானத்தை பெற்று கொண்டது.

இரண்டாவது தொகுதி பி8ஐ விமானங்களில் ஒன்றான இது அமெரிக்காவின் சியாட்டல் நகரத்தில் இருந்து இன்று இந்தியாவில் உள்ள கோவா கடற்படை விமானதளத்தை வந்தடைந்தது.

ஏற்கனவே 10 பி8ஐ விமானங்கள் படையில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு விமானம் வந்துள்ளது மேலும் இந்த வருடமே மற்றொரு விமானமும் வர உள்ளது.

இவை தவிர மேலதிகமாக 6 விமானங்களை இந்திய கடற்படை வாங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் மொத்தமாக இந்திய கடற்படை சுமார் இத்தகைய 22 விமானங்களை இயக்க விரும்புகிறது.

சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் நடமாட்டத்தை இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிக்க இந்த விமானங்களை வாங்கிய இந்தியா தற்போது அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

மேலும் இந்த பி8ஐ விமானங்களை இந்திய கடற்படை கல்வான் மற்றும் டோக்லாம் பிரச்சனைகளின் போது கண்காணிப்பு பணிக்காக சீன எல்லையோரம் களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.