ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய லியனார்டோ நிறுவனத்தின் மீதான தடையை நீக்க இத்தாலி மற்றும் இந்தியா ஆலோசனை !!

  • Tamil Defense
  • October 31, 2021
  • Comments Off on ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய லியனார்டோ நிறுவனத்தின் மீதான தடையை நீக்க இத்தாலி மற்றும் இந்தியா ஆலோசனை !!

கடந்த 2006-2007 வாக்கில் இந்திய விமானப்படைக்கு 12 வி.ஐ.பி ஹெலிகாப்டர்கள் வாங்க இத்தாலியில் இருந்து அகஸ்டா வெஸ்ட்லான்ட் ரக தேர்வு செய்யப்பட்டது.

ஆனால் இந்த ஹெலிகாப்டரை தயாரித்த GKN மற்றும் FINMECCANICA ஆகிய நிறுவனங்கள் ஆர்டரை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தது தெரிய வந்த நிலையில் அந்த நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டது.

தற்போது GKN தனது பங்குகளை FINMECCANICA நிறுவனத்திற்கு விற்ற நிலையில் அந்த நிறுவனம் லியனார்டோ என பெயரை மாற்றி இயங்கி வருகிறது.

இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றுள்ள நிலையில் இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி லியனார்டோ நிறுவனம் மீதான தடையை நீக்குவது குறித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு சில காரணங்கள் முன்வைக்கப்படுகிறது, அதாவது தற்போதைய லியனார்டோ நிறுவனத்தின் பங்குகளில் பாதி இத்தாலி அரசுக்கு சொந்தமானது மேலும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

மற்றொரு காரணமாக லியனார்டோ குழுமம் மிகப்பெரியது ஆகவே அதன் ஹெலிகாப்டர்கள் பிரிவு மீதான தடையை தொடர்ந்து கொண்டே மற்ற பிரிவுகள் மீதான தடையை நீக்கி பயன் பெறலாம் என்பதாகும்.

லியனார்டோ குழுமம் நமது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிகளுக்கான BLACK SHARK ரக நீரடிகணைகளை தயாரிக்கும் WASS நிறுவனத்தை வாங்கியுள்ளதும்,

லியனார்டோ குழுமம் பல்வேறு வகையான ஆளில்லா நீரடி வாகனங்கள், கடற்படை பிரங்கிகள், ராணுவ தளவாடங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிப்பதும் குறிப்பிடத்தக்கது.