சீன எல்லையோரம் வானில் பயன்படுத்தக்கூடிய சென்சார்கள் மற்றும் சுய நுண்ணறிவு திறன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் இந்தியா !!

  • Tamil Defense
  • October 21, 2021
  • Comments Off on சீன எல்லையோரம் வானில் பயன்படுத்தக்கூடிய சென்சார்கள் மற்றும் சுய நுண்ணறிவு திறன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் இந்தியா !!

இந்திய ராணுவம் எல்லையோரம் சீன படைகள் மீதான கண்காணிப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அதற்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருவதாகவும் கிழக்கு பிராந்திய தளபதி கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசும்போது சீன ராணுவம் எல்லையோரம் சற்றே படைகளை அதிகரித்துள்ளதாகவும் அவ்வப்போது போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறிய அவர்,

இந்திய ராணுவம் வான் சார்ந்த சென்சார்கள் மற்றும் சுய நுண்ணறிவு திறன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.