மேலதிக கே9 வஜ்ரா பீரங்கிகளை வாங்க விரும்பும் இந்திய தரைப்படை !!

  • Tamil Defense
  • October 4, 2021
  • Comments Off on மேலதிக கே9 வஜ்ரா பீரங்கிகளை வாங்க விரும்பும் இந்திய தரைப்படை !!

தென் கொரியாவின் கே9 பேந்தர் வகை அதிநவீன தானியங்கி பீரங்கிகளை இந்திய ராணுவம் கே9 வஜ்ரா என்ற பெயரில் இந்தியாவில் தயாரித்து பயன்படுத்தி வருகிறது.

சுமார் இத்தகைய 100 பீரங்கிகளை ஏற்கனவே படையில் இணைத்த நிலையில் இவற்றை தற்போது லடாக்கிலும் களமிறக்கி உள்ளது.

இவற்றின் செயல்பாட்டில் திருப்தியடைந்த தரைப்படை தற்போது மேலதிக கே9 வஜ்ராக்களை வாங்க விரும்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி மலையக பகுதிகளுக்காக வேண்டி 40 கே9 வஜ்ரா தானியங்கி பீரங்கிகளை பெற்று பயன்படுத்தி கொள்ள தரைப்படை விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.