ஒரே சீனா கொள்கையில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டதா ??

  • Tamil Defense
  • October 19, 2021
  • Comments Off on ஒரே சீனா கொள்கையில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டதா ??

சீனா மிக நீண்ட காலமாகவே ஒரே சீனா எனும் கொள்கையின்படி செயல்பட்டு தனது நாட்டை மீள்கட்டமைப்பு செய்ய விரும்புகிறது.

அதாவது தான் இழந்து போனதாக சுட்டி காட்டும் பகுதிகளை மீண்டும் சீன நிலப்பரப்புடன் இணைக்க அதிக தீவிரமாக செயல்பட்டடு வருகிறது.

அந்த வகையில் திபெத் லடாக் ஆக்கிரமிப்பு ஹாங்காங் வரிசையில் தற்போது தைவான் இந்தியாவின் ஒரு சில பகுதிகள் ஜப்பான் தீவுகள் என அதன் இலக்கு நீள்கிறது.

இந்தியா இந்த கொள்கையில் தனது நிலைபாட்டை சீனாவுக்கு சாதகமாகவே வைத்துள்ளது மேலும் தைவானை தனி நாடாக இதுவரை இந்தியா அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே சீனாவுக்கு வலிக்கும் வகையில் இந்தியா திபெத் மற்றும் தைவான் ஆதரவை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் அதற்கு முன்னர் அந்த மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இத்தகைய கடுமையான நிலைபாட்டை இந்தியா எடுத்தால் தான் தேசிய பாதுகாப்புக்கு சீனா கொடுக்கும் இடையூறுகளுக்கு தகுந்த பதிலடியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.