
கடந்த 2015ஆம் ஆண்டு மொரிஷியஸ் நாட்டு கடலோர காவல்படையில் சேவையில் இணைந்த பராக்குடா எனும் ரோந்து கலன் மேம்பாட்டு பணிகளுக்காக இந்தியா வந்தது.
மேம்பாட்டு பணிகள் முடிந்ததும் மொரிஷியஸ் திரும்பிய அக்கப்பல் போர்ட் லூயிஸ் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் மீண்டும் அந்நாட்டு கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விழாவில் மொரிஷியஸ் அமைச்சர் ஆலன் கனூ மற்றும் அந்நாட்டிற்கான.இந்திய தூதர் திருமதி. நந்தினி சிங்க்லா மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மொரிஷியஸ் அமைச்சர் ஆலன் கனூ மொரிஷியஸ் நாட்டின் பாதுகாப்பில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பதாகவும் அந்நாட்டு கடலோர காவல்படையின் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை இந்தியா உதவி உள்ளதாகவும்,
இருதரப்பு உறவுகளில் பாதுகாப்பு முக்கிய இடம் பெற்றிருப்பதாகவும் கூறிய அவர் விரைவில் இரண்டு நாடுகளும் தூதரக உறவுகளின் 75ஆவது ஆண்டு விழாவை அனுசரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.