
சமீபத்தில் காஷ்மீரில் தங்களது பணிகளை முடித்துவிட்டு தில்லி திரும்பிய சிறப்பு மத்திய உளவுத்துறை குழுவை மீண்டும் காஷ்மீர் செல்ல உள்துறை அமைச்சர் அமித்ஷா பணித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் அனைத்து அமைப்புகளும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குனர் தில்பாக் சிங் உடன் இணைந்து செயல்படவும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர நாடு தழுவிய அளவில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக மிகப்பெரிய திட்டம் ஒன்றும் உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர் வகுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பஞ்சாப் உத்தர பிரதேசம் தில்லி ஆகிய மாநிலங்களும் ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட கேட்டு கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.