
இந்தியா சமீபத்தில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன ராணுவ தளவாடங்களை சீனா உடனான எல்லையை பலப்படுத்த பயன்படுத்தி வருகிறது.
அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய சினூக் கனரக ஹெலிகாப்டர்கள், எம்777 பிரங்கிகள், துப்பாக்கிகள் இதுதவிர சூப்பர்சானிக் ஏவுகணைகள் மற்றும் நவீன கண்காணிப்பு அமைப்பு ஒன்று ஆகியவை களத்தில் உள்ளன.
மேலும் தரைப்படை முன்பு சீனாவுக்கு எளிதான இலக்காக கருதப்பட்ட தவாங் செக்டாரில் தற்போது சுமார் 30,000 வீரர்களை குவித்துள்ளது.
மேலும் இந்த பகுதியையே தாக்குதல் நடத்தும் தளமாக மாற்றியமைக்க திட்டம் ஒன்றையும் தீட்டி உள்ளது இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தரைப்படை ஒரு புதிய ஏவியேஷன் ப்ரிகேடை உருவாக்கி உள்ளது.
இந்த ஏவியேஷன் ப்ரிகேட் அதாவது வானூர்தி படை ப்ரிகேடில் தான் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் பணியில் உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்.