கண்ணிவெடி மற்றும் ஆளில்லா வான் அமைப்பு எதிர்ப்பு போர் முறை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அமெரிக்க வீரர்கள் !!

  • Tamil Defense
  • October 26, 2021
  • Comments Off on கண்ணிவெடி மற்றும் ஆளில்லா வான் அமைப்பு எதிர்ப்பு போர் முறை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அமெரிக்க வீரர்கள் !!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் அன்கரேஜ் பகுதியில் நடைபெற்று வரும் யுத் அப்யாஸ் போர் பயிற்சியில் இந்திய அமெரிக்க வீரர்கள் பல்வேறு வகையான பயிற்சிகளை மேற்கொண்டனர்.

அந்த வகையில் ஆளில்லா வான் அமைப்பு எதிர்ப்பு மற்றும் கண்ணிவெடி எதிர்ப்பு போர் முறைகளில் பயிற்சி மேற்கொண்டனர் அப்போது இந்திய வீரர்கள் கண்ணிவெடி செயலிழப்பில் தங்களது திறன்களை வெளிபடுத்தினர்.

இதனை தொடர்ந்து அமெரிக்க வீரர்கள் ஆளில்லா விமானங்களை ரேடியோ அலைவரிசைகள் மூலமாக முடக்கும் துப்பாக்கி மூலமாக தங்களது திறன்களை வெளிபடுத்தினர் தொடர்ந்து,

ஆளில்லா வாகனம் மூலமாக கண்ணிவெடி கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு, பின்னர் கண்ணிவெடி பாதுகாப்பு திறன் கொண்ட பேந்தர் மற்றும் பஃப்பல்லோ வாகனங்களை இந்திய வீரர்களுக்கு காட்சிபடுத்தினர்.

14 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் பல்வேறு வகையான ஐக்கிய நாடுகள் சபையின் திட்டவரைவின்படி பயங்கரவாத எதிர்ப்பு கிளர்ச்சி எதிர்ப்பு போர் திறன்களை இருதரப்பினரும் பரிசோதிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.