
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்க பாராளுமன்ற அறிக்கையில் ஹைப்பர்சானிக் ஆயுதங்களை உருவாக்கி வரும் எலைட் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க பாராளுமன்றத்தின் ஆய்வு குழு சமர்பித்த அறிக்கையில் ரஷ்யா சீனா அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்னேற்றம் அடைந்த ஹைப்பர்சானிக் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில்,
இந்தியா ஆஸ்திரேலியா ஃபிரான்ஸ் ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் ஹைப்பர்சானிக் ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கத்தில் களம் இறங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆஸ்திரேலியா அமெரிக்காவுடன் இதற்காக கைகோர்த்துள்ள நிலையில் இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து பிரம்மாஸின் மாக்7 வேகத்திறன் கொண்ட ஹைப்பர்சானிக் ஏவுகணையை உருவாக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா ஏற்கனவே மாக்6 வேகத்தில் செல்லக்கூடிய ஏவுகணை ஒன்றை அதன் உள்நாட்டு ஹைப்பர்சானிக் ஆயுத உருவாக்க திட்டத்தின்கீழ் பரிசோதனை செய்ததும், மாக்13 வேக திறன் கொண்ட சோதனை மையங்களை இயக்கி வருவதும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சமீபத்தில் சீனா ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றதும் அமெரிக்கா தனது சோதனையில் தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.