
இந்திய மற்றும் அமெரிக்க ராணுவங்கள் இடையே அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நடைபெற்று வந்த யுத் அப்யாஸ் கூட்டு ராணுவ பயிற்சி முடிவுக்கு வந்துள்ளது.
கடைசியாக அலாஸ்காவின் பனிபடர்ந்த சூகாச் மலைத்தொடர்களின் முகடுகளில் இரண்டு ராணுவங்களும் நான்கு அணிகளாக பிரிந்து பயிற்சி மேற்கொண்டனர்.

இரண்டு அணிகள் இந்திய அதிகாரிகளாலும் இரண்டு அணிகள் அமெரிக்க அதிகாரிகளாலும் வழிநடத்தப்பட்டன அவை மலை உச்சி மற்றும் அடிவாரத்தில் உள்ள இலக்குகளை நோக்கி நகர்ந்தன.

இந்த பயிற்சிகள் மூலமாக அமெரிக்கர்கள் ஆர்ட்டிக் கூடாரங்களை பயன்படுத்துவது பற்றியும் இந்திய படையினர் பனிச்சரிவில் சிக்கினால் உயிர் பிழைப்பது பற்றியும் தகவல்களை பரிமாறி கொண்டனர்.