பாலகோட்டில் தாக்குதல் நடத்திய இந்தியா இஸ்ரேலை போன்று செயல்படுவதாக பேசிய இம்ரான் கான் !!.

  • Tamil Defense
  • October 14, 2021
  • Comments Off on பாலகோட்டில் தாக்குதல் நடத்திய இந்தியா இஸ்ரேலை போன்று செயல்படுவதாக பேசிய இம்ரான் கான் !!.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மத்திய கிழக்கு ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்தியா பாலகோட்டில் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேலை போல செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் உலகிலேயே அணு ஆயத போர் ஏற்படுத்த கூடிய இடமாக காஷ்மீர் இருப்பதாகவும் வேறு எந்த பகுதியிலும் இதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் கூறினார்.

மேலும் புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பு என குற்றம்சாட்டி இந்தியா பாலகோட்டில் தாக்குதல் நடத்தியதையும் ஒப்பு கொண்டார்.