1 min read
இஸ்ரேலில் பன்னாட்டு பயிற்சியில் பங்கு பெறும் இந்திய விமானப்படை !!
இஸ்ரேலில் விரைவில் நடைபெற உள்ள “ஃப்ளூ ஃபளாக்” பன்னாட்டு கூட்டு பயிற்சிகளில் இந்திய விமானப்படையும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த பயிற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஃபிரான்ஸ் மற்றும் கீரீஸ் ஆகிய நாடுகளும் பங்கேற்க உள்ளன.
இந்தியா சார்பில் இந்த கூட்டு பயிற்சியில் நமது மிராஜ்-2000 விமானங்கள் பங்குபெற உள்ளதாக விமானப்படை தலைமையக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் பங்கு பெறும் கீரிஸ் நாட்டு விமானப்படையும் மிராஜ்2000 விமானங்களை அனுப்பி வைக்க உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.