தவாங் செக்டாரில் மோதல் சீனா குறிவைக்கும் அளவுக்கு தவாங் எப்படி முக்கியவத்துவம் பெற்றது ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • October 10, 2021
  • Comments Off on தவாங் செக்டாரில் மோதல் சீனா குறிவைக்கும் அளவுக்கு தவாங் எப்படி முக்கியவத்துவம் பெற்றது ஒரு பார்வை !!

தவாங் செக்டாரில் 1960கள் முதலே சீன படையினர் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர் இந்திய சீன எல்லையில் பதற்றம் மிக்க இடங்களில் இது முக்கியமானதாகும்.

மேலும் தவாங் செக்டார் வரலாற்று ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும் இதை பற்றி சற்றே விரிவாக பார்க்கலாம்.

தவாங் பகுதியில் தான் ஆறாவது தலாய் லாமா பிறந்தார் ஆகவே திபெத்திய புத்த மத நம்பிக்கையில் மிக முக்கியமான தலங்களில் இதுவும் ஒன்றாகும், ஆக ஆக்கிரமிப்பு திபெத்தின் ஒரு பகுதியாக சீனா இதனை கருதுகிறது.

மேலும் புவியியல் ரீதியாக தவாங் பகுதி வழியாக தான் பிரம்மபுத்திரா நதியின் சமவெளி பகுதிகள் மற்றும் அசாம் மாநிலத்தின் தேஸ்பூர் பகுதிக்கு செல்ல முடியும்.

அதை போலவே நெடுகிய சிலிகுரி காரிடார் இதன் ஒரு பகுதியாகவும் தவாங் பகுதியில் இருந்து செல்லும் தகவல் தொடர்பு அமைப்பு குவஹாத்தி நகரம் வரை நீள்கிறது. இதனால் தான் தவாங் ராணுவ முக்கியத்துவம் பெறுகிறது.

இங்கு இருக்கும் மூன்று முக்கியமான கணவாய்களான போம்டிலா, நெச்சிபூலா மற்றும் சேலா ஆகியவை தவாங் செக்டாரை அருணாச்சல பிரதேசத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது, இவை நமது படைகளின் நகர்வுக்கு பேரூதவியாக அமைந்துள்ளன.