இங்கிலாந்து கடற்படையின் குயின் எலிசபெத் விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் படையணியானது கூட்டு பயிற்சியை முன்னிட்டு இந்தியா வருகிறது.
இதற்காக தற்போது இந்த தாக்குதல் படையணி வங்க கடல் பகுதியில் நுழைந்து மும்பை நோக்கி பயணித்து வருகிறது அதனுடன் நெதர்லாந்து கடற்படையின் எவர்ஸ்டன் எனும் ஃப்ரிகேட்டும் வருகிறது.
இந்த தாக்குதல் படையணி இந்தியாவின் முப்படைகளுடன் மிகவும் தீவிரமான போர் பயிற்சிகளில் பங்கு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜீலை மாதமும் இதே படையணி வங்க கடல் பகுதியில் இந்திய கடற்படை போர் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளுடன் இணைந்து கூட்டு பயிற்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.