
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையோர பகுதியான தார் தரண் மாவட்டத்தில் ஆயுதங்கள் மற்றும் 1 கிலோ போதை பொருள் காவல்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படையால் கண்டுபிடிக்கபட்டு உள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களில 22 கைதுப்பாக்கிகள், 44 மேகஸின்கள், 100 தோட்டாக்கள் மற்றும் 1 கிலோகிராம் ஹெராயின் ஆகியவை கைபற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையை எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் காவல்துறையின் உளவுத்துறை ஆகியவை நடத்தியுள்ளன.
இது போல இந்த வருடம் ஜூன் மாதம் படாலா பகுதியில் 44 கைதுப்பாக்கிகள் கைபற்றப்பட்டதும் தொடர்ந்து பாகிஸ்தான் வழியாக இத்தகைய கடத்தல் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.