200ஆவது தொகுதி பிரம்மாஸ் பாகங்களை டெலிவரி செய்த கோத்ரேஜ் நிறுவனம் !!

கோத்ரேஜ் நிறுவனத்தின் ஒரு பிரிவான கோத்ரேஜ் மற்றும் பாய்ஸ் கடந்த 2001ஆம் ஆண்டு முதலாக பிரம்மாஸ் திட்டத்தில் முக்கியமான பங்காளியாக உள்ளது.

சமீபத்தில் இந்த நிறுவனம் 200 தொகுதி பிரம்மாஸ் ஏவுகணை பாகங்களை பிரம்மாஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு டெலிவரி செய்தது.

ஒவ்வொரு பாகமும் 5000 சின்னஞ்சிறு பாகங்களால் செய்யப்பட்ட 138 பாகங்களை கொண்டவை ஆகும்.

இதற்கான விழாவில் கோத்ரேஜ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் மூத்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டு பணியாளர்களை பாராட்டி பேசினர்.