நடுக்கடலில் தவித்த மூன்று இந்தியர்களை மீட்ட ஃபிரெஞ்சு கடற்படை !!

  • Tamil Defense
  • October 4, 2021
  • Comments Off on நடுக்கடலில் தவித்த மூன்று இந்தியர்களை மீட்ட ஃபிரெஞ்சு கடற்படை !!

அரபிக்கடல் பகுதியில் எம்.வி. காட்வின் ஐலன்ட் எனும் வர்த்தக கப்பல் பயணிக்கையில் ஏதோ காரணத்தால் அக்கப்பலில் பணியாற்றி வந்த மூன்று இந்திய மாலுமிகள் தவிக்க கப்பல் குழு உதவி கோரியது.

இதனையடுத்து அப்பகுதியில் கடல் கொள்ளை ஒழிப்பு பணியில் ஐரோப்பிய படைகள் சார்பில் நிலைநிறுத்தப்பட்டு இருந்த ஃபிரெஞ்சு கடற்படை கப்பலான எஃப்.எஸ். லாங்க்யூடாக் மீட்பு பணியில் இறங்கியது.

அந்த போர்க்கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் உடனடியாக விரைந்து சென்று மூன்று இந்திய மாலுமிகளையும் மீட்டு ஒமன் நாட்டின் சலாலா நகரில் உள்ள சுல்தான் காபூஸ் மருத்துவமனையில் சேர்க்க உதவியது.