
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ஊடுருவ முயன்ற சில பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்ட படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
ஆனால் இதை எதிர்பார்த்து பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சிலர் நடத்திய தாக்குதலில் 1 இடைநிலை அதிகாரி மற்றும் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து ராணுவத்தினர் மிகப்பெரிய அளவில் பயங்கரவாதிகளை தேடும் ஆபரேஷனை துவங்கி உள்ளனர்.